டைட்டானிக் படத்தின் கதாநாயகி படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார்

190

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி Kate Winslet படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குரோஷியா நாட்டில் லீ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ள Kate Winslet படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருந்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்தவுடம் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.