சூடானில் சிக்கியுள்ள 3 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 4 நாடுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது…

154
Advertisement

துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இருதரப்பினர் இடையேயான மோதலில் இதுவரை சுமார் 300 பேர் இறந்துள்ளனர். சூடானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால், தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சூடானில் உள்ள இந்தியர்கள் நிலைமை குறித்து, கார்டோம் நகரில் உள்ள இந்திய தூரக அதிகாரிகளுடன், மத்திய அரசு தொடர்பில் உள்ளது.  மேலும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன், இந்தியா இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.