ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன….

24
Advertisement

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர், உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.