பட்டையைக் கிளப்பிய அரபிக் குத்து

653
Advertisement

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் வெளியான 18 மணிநேரத்துக்குள் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் யூ-ட்யூபில் 121 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஒரு லிரிக் வீடியோ குறுகிய காலத்தில் இந்தளவு பார்வைகளைப் பெறுவது இதுவே முதல்முறை. இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள் விஜய்ரசிகர்கள்.