Saturday, May 18, 2024
Home Tags SathiyamTv

Tag: SathiyamTv

ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்…

0
ராணிகள் மட்டுமே குளிக்க வெட்டப்பட்ட குளம்... இயற்கை அழகை ரசிக்க உருவாக்கப்பட்ட தோட்டம்... விஜயநகர கட்டுமான பணியில் உருவாக்கப்பட்ட பேரழகு... ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்... சேலம் கோரிமேடு அருகே உள்ள நகரமலை அடிவாரம் பின்புறம் பகுதியில்...

ஆணியே புடுங்காத  SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?

0
மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை...

ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

0
ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலானபேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான...

Time Bomb பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா?

0
Time Bomb பத்தி எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம். At least சினிமாவுலயாவது கண்டிப்பா பாத்திருப்போம். அதுல குறிக்கப்பட்ட நேரம் குறைஞ்சுட்டே வந்து 0 எண்ணை, கருவி அடையும் போது வெடிச்சுடும். அதே மாதிரி நம்ம...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அலட்சியம்… இளம்பெண் விபரீத முடிவு

0
மருத்துவமனையில் உயிருக்குப்போராடியபடி ஒரு பெண் பேசிய வீடியோ வாக்குமூலம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ''தனது கணவரின் நண்பர் ஒருவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக கடன் வாங்கி கொடுத்ததாகவும், கடன் வாங்கிய அந்த...

‘மயோனைஸ்’ மைனஸ்… அதிரவைக்கும் ஆபத்துகள்…

0
மயோனைஸ் என்றாலே,  வாவ்... மயோனைஸா என பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊரும். பார்ப்பதற்கு பளபளப்பாக வெண்ணிறத்தில் இருக்கும் இந்த மயோனைஸ் மறைத்து வைத்திருக்கும் கருப்பு பக்கம்,  அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்பதுதான் குறித்துதான் இந்த வீடியோவுல டீடெய்லா பார்க்கப்போறோம்... பொதுவாக...

மேட்ரிமோனியல் வில்லன்கள்… இளம்பெண்களே உஷார்

0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ''தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  பக்கத்தில இருக்குற திருமங்கைசேரி பகுதியில் ரெண்டு குழந்தைகளுடன்...

விவசாயி மறைத்த தங்கக்கட்டி… மிரட்டிய ப்ளாக்மெயிலர்கள்…கிராமத்தில் நடந்த கிரைம்

0
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியைச் சார்ந்தவர் 59 வயது நிரம்பிய முருகன்(59). இவரது மனைவி 50 நிரம்பிய கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து...

ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் பெயர் திருத்தம் செய்யலாம் – முழு விவரம் இதோ!!

0
ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பான் கார்டில் உங்களது பெயர் தவறாக இருந்தால் உடனடியாக அதனை திருத்தம் செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பான் கார்டில் பெயரை திருத்தம் செய்வது என்பது குறித்து இங்கு காணலாம். முதலில் https://www.incometaxindia.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று பான் கார்டு சேவை என்பதை கிளிக் செய்யவும். பின்னர், பான் கார்டில் திருத்தம் செய்வதை கிளிக் செய்து உங்களது பான் கார்டு எண்ணை பதிவு செய்யவும். அதன் பின்னர், புதிய பக்கம் திறக்கப்படும். அதில் பான் கார்டில் நீங்கள் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ அதை இங்கே நிரப்ப வேண்டும். இதன் பின்னர், ஆதார் கார்டு அல்லது முக்கிய ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர், நீங்கள் பெயரை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி சமர்ப்பித்தால் பான் கார்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு விடும். -சலோமி

Recent News