Sunday, May 5, 2024
Home Tags SathiyamTv

Tag: SathiyamTv

திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…

0
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில்...

அரசு பேருந்துல பயணிச்சா 10,000  ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT… 

0
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும். சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு. அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.

கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?

0
இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க...

TNPSC  எழுத தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு!!

0
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். அவ்வாறு நடத்தப்படும்...

செக்யூரிட்டி டூ வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ… யார் இந்த ஷமர் ஜோசப்?

0
27 வருடங்கள்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் தடம் பதிச்சிருக்கு வெஸ்ட் இண்டீஸ் டீம். இதுல, ஒட்டுமொத்த கவனமும் ஷமர் ஜோசப் மேல தான் திரும்பியிருக்கு. காரணம், அவர் பண்ண தரமான சம்பவம் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ்ல ஒன்னு...

நிறம் மாறும் நிதிஷ் குமாருக்கு  இப்படியொரு ‘அலர்ஜி’!

0
10 ஆண்டுகள்ல அஞ்சு முறை கூட்டணி மாற்றம், 9 முறை CM பதவின்னு பிசியான அரசியல்வாதியா இருக்குற நிதிஷ் குமார், 35 ஆண்டுகளா MLA மட்டும் ஆகல. அதெப்படிப்பா MLA ஆகாம CM ஆக முடியும்னு தானே கேக்குறீங்க? அதைப் பத்திதான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம். 2020ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பாஜக கூட சேர்ந்து நிதிஷ் குமாரோட JDU எதிர்கொண்டுச்சு. 122 தொகுதிகள்ல வெற்றி பெற்றா ஆட்சியை புடிக்கலாம் அப்படின்ற நிலையில, பாஜக 74 தொகுதிகள்லயும் JDU 43 தொகுதிகள்லையும் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் CM ஆனாரு. அதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டுல பாஜகவை விட்டு வெளியேறின நிதிஷ் RJD மற்றும் காங்கிரஸ் கூட கூட்டணி வச்சு மறுபடியும் CM பதவியை புடிச்சாரு. இப்ப  இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக ஆதரவு MLAக்களோட மீண்டும் ஒரு முறை CM ஆகி இருக்காரு. இப்படி கிடைக்குற chanceல லாம் புகுந்து விளையாடுற நிதிஷ் குமாருக்கு MLA பதவின்னா மட்டும் கொஞ்சம் அலர்ஜிங்க. காரணம், அது மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய பதவி. இப்படி மூச்சுக்கு முன்னூறு முறை கூட்டணியை மாத்துனா மக்களை நம்பி தொகுதிகளை எப்படி வெற்றி பெற முடியும்? 2005ஆம் ஆண்டுல இருந்து தற்போது வரைக்கும் பீகார் முதல்வரா நிதிஷ் குமார் இருந்துட்டு வராரு. அதுக்கு முக்கியமான காரணம், அங்க இருக்க சட்ட மேலவை தான். தமிழ்நாட்டுல முன்னொரு காலத்துல சட்ட மேலவை இருந்தாலும், இப்ப நடைமுறைல இல்ல. ஆனா கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்ல சட்டசபை மட்டுமில்லாம சட்ட மேலவையும் செயல்பட்டு வருது. சட்ட மேலவை உறுப்பினர் பதவி வகிக்க MLAக்களோட ஆதரவு இருந்தா போதும். அந்தவகையில் தான் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினரா இருந்து முதலமைச்சர் பதவியை தக்க வச்சுட்டு வராரு. 1977ஆம் ஆண்டு ஹரனாட் சட்டசபை தொகுதியில நின்னு தோல்வியடைஞ்ச பிறகு, 1985ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்ல போட்டியிட்டு முதல் முறையா மட்டுமில்ல கடைசி முறையாவும் MLA ஆனாரு நிதிஷ் குமார். அதுக்கப்புறம் 35 ஆண்டுகளா MLAவா போட்டியிடாமலே முதல்வர் பதவியை கைவசம் வச்சுருக்கறது, நிதிஷ் குமாரோட ராஜதந்திரமா பாக்கப்பட்டாலுமே தோல்விக்கு பயந்து, MLAகளை மட்டுமே அரசியல் சதுரங்கத்துல காய்நகர்த்தி பதவியை தக்க வைக்குறது ஒரு வகையான கோழைத்தனம் அப்படின்றதே அரசியல் விமர்சகர்களோட பரவலான கருத்தா இருக்கு.

ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

0
ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு. இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன....

நெருங்கும் தேர்தல்…அரசியல் கட்சிகளுக்கு பணம் வருவது எப்படி?

0
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிட்டே வர்ற சூழல்ல, ஆட்சியை புடிக்க பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பலக்கட்ட வியூகங்களை வகுத்து விறுவிறுப்பா செயல்பட்டு வராங்க. அது இருக்கட்டும், தேர்தலை சமாளிக்க...

அடிக்கடி செவ்வாழை சாப்பிடுறீங்களா? கிட்னியை சட்னி ஆக்கிவிடும் செவ்வாழை? அதிர்ச்சி தகவல்கள்

0
செவ்வாழை சாப்பிட்டால் உடை எடை அதிகரிக்குமா? ஒருநாளைக்கு எத்தனை  செவ்வாழை சாப்பிடலாம்? கலோரிகள் அடிப்படையில் மட்டுமே உடல் எடை கூடுமா? கிட்னி நோயாளிக்கு செவ்வாழை ஆபத்தா?  வாழைப்பழங்கள்ல ரஸ்தாளி, கற்பூரவல்லி, நேந்திரம், பச்சை வாழைப்பழம் மற்றும் செவ்வாழைன்னு எத்தனையோ வகைகள் இருக்கு. இதுல ஒவ்வொரு வகை...

வாழை நார், கற்றாழையில் புத்துணர்ச்சியூட்டும் புது சேலைகள்..

0
தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவாளர்கள் வேலை...

Recent News