அடிக்கடி செவ்வாழை சாப்பிடுறீங்களா? கிட்னியை சட்னி ஆக்கிவிடும் செவ்வாழை? அதிர்ச்சி தகவல்கள்

89
Advertisement

செவ்வாழை சாப்பிட்டால் உடை எடை அதிகரிக்குமா?

ஒருநாளைக்கு எத்தனை  செவ்வாழை சாப்பிடலாம்?

கலோரிகள் அடிப்படையில் மட்டுமே உடல் எடை கூடுமா?

கிட்னி நோயாளிக்கு செவ்வாழை ஆபத்தா? 

வாழைப்பழங்கள்ல ரஸ்தாளி, கற்பூரவல்லி, நேந்திரம், பச்சை வாழைப்பழம் மற்றும் செவ்வாழைன்னு எத்தனையோ வகைகள் இருக்கு. இதுல ஒவ்வொரு வகை வாழைப்பழத்துக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவப் பயன்கள் இருந்தாலும், செவ்வாழைக்கு தனித்துவமான சிறப்பு பயன்கள் பல இருக்கு. அதுலயும், செவ்வாழை அடிக்கடி சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்குமான்னு சிலருக்கு கேள்வி இருக்கலாம். செவ்வாழை உடல் எடைல எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துது, ஒரு நாளைக்கு எத்தனை செவ்வாழை சாப்பிடலாம்? செவ்வாழை சாப்பிடுறதால உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம்.

சராசரியா ஒரு செவ்வாழைல 21 கிராம் கார்போஹைட்ரேட்டும் 90 கலோரிகளும் இருக்கும். கலோரிகள் அடிப்படையில மட்டுமே உடல் எடை கூடுறதில்ல. குறிப்பிட்ட கலோரிகள் எதுல இருந்து வருது அப்படின்றத பொறுத்துதான் உடல் எடை கூடும். உதாரணத்துக்கு, மைதா மற்றும் சர்க்கரை சேர்ந்த இனிப்புகள் இருந்து கிடைக்குற  சத்துக்களற்ற கலோரிகள் தான் உடல் எடை கூட பிரதான காரணமா இருக்கு.

பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைஞ்ச செவ்வாழை அஜீரணம், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வா அமையுது. ரத்த அழுத்தத்தை குறைக்கும் இந்த செவ்வாழைல, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்குற probiotic பண்புகளும் அதிகமா இருக்கு.

14 நாட்கள், அதாவது ரெண்டு வாரத்துக்கு தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தா, உடலில் நல்ல பாக்டீரியாக்கள் பத்து மடங்கு வரை அதிகமாகும்னு ஆய்வுகள் சொல்லுது. சக்கரை நோயாளிகள் கவனத்துல கொள்ள வேண்டிய Glycemic Index , செவ்வாழையை பொறுத்த வரை 45 என்ற அளவுல இருக்கு……………………………?  குழந்தைகள் மற்றும் ஆரோக்கியமான பெரியவர்கள் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடலாம். சக்கரை நோயாளிகள் வாரத்துக்கு ரெண்டு முறை, அதுலயும் மத்த கார்போஹைரேட் அளவுகளை குறைச்சுட்டு செவ்வாழையை எடுத்துக்கலாம்னு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்குறாங்க.

பொட்டாசியம் அதிகம் இருக்குற செவ்வாழை பழத்தை கிட்னி patients கட்டாயமா தவிர்த்துடனும். சரிவிகித உணவு எடுக்காதவங்க, காய்கறிகளே சாப்பிடாம எப்ப பாத்தாலும் நொறுக்குத் தீனிகளை அளவுக்கதிகமா சாப்பிடுறவங்க, கொஞ்சம் கூட உடல் பயிற்சி செய்யாதவங்களுக்கு தான் weight போடுமே தவிர, செவ்வாழையை சாப்பிடறதால மட்டும் எடை கூடாது. அது மட்டுமில்லாம, எந்த உணவா இருந்தாலும் முறையான தகவல்களை தெரிஞ்சுட்டு, அளவோட  சாப்பிடுறது தான் சரியான அணுகுமுறையா இருக்கும் அப்படின்றது தான் உணவியல் நிபுணர்களோட கருத்தா இருக்கு. இந்த மாதிரி பயனுள்ள தகவல்களை டீடெய்லா தெரிஞ்சுக்க சத்தியம் டிஜிட்டலோடு இணைஞ்சிருங்க…