இது மட்டும் தெரிஞ்சா இனி மறந்துகூட PROTEIN POWDER எடுக்கமாட்டீங்க…

164
Advertisement

இன்றைய காலக்கட்டத்தில் 100-ல் 90% பொதுமக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் பெண்கள் உடம்பை குறைத்து ஃபிட்டா ஜிம்முக்கு செல்வதோடு, எந்தவிதமான முறையான அனுபவமும் இல்லாத ஜிம் மாஸ்டர்களின் பரிந்துரையில் புரதச்சத்து மாவு அதாவது protein powder-யை உட்கொள்வது அதிகரித்துவருகிறது.

குறிப்பாக, ஓவர் நைட்டில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் உருவாக்க நினைப்பது, ஆறே மாதத்தில் ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றுவிடவேண்டும் போன்ற ஆர்வக்கோளாறுகள் இதுபோன்ற புரோட்டின் பவுடர்களை அதிகமாக உட்கொள்ளுவதாக கூறப்படுகிறது. திடீர் திருமண நிச்சயதார்த்தம். உடனடியாக உடம்பைக் குறைத்து இலியானா ரேஞ்சுக்கு ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளை நாடுகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவல்.

-ரிதி ரவி