உங்களுக்கு 2 கிட்னியும் இருக்கா? செக் பண்ணிக்கோங்க..இல்லன்னா உயிருக்கே ஆபத்து!

90
Advertisement

நம்ம உடலோட கட்டமைப்பு ரொம்பவே ஆச்சர்யமானது. பல விதமான வேலைகளை செய்யும் உறுப்புகள் அதுக்கேத்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு. அதுல கண்கள், காதுகள், நுரையீரல்கள் மாதிரி இரண்டு சிறுநீரகங்கள் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு கிட்னி சரியா வேலை செய்யலைன்னாக்கூட இன்னொரு கிட்னி அது செய்ய வேண்டிய வேலையை சரியா செஞ்சா, நம்ம உடல்ல பெருசா வித்தியாசம் தெரியாது.

அதுனால தான் நிறைய பேர் ஒரு சிறுநீரகத்தை தானம் பண்ணிட்டு கூட இயல்பான வாழ்க்கை வாழ்றது சாத்தியமாகுது. ஆனா, பிறவியிலேயே ஒரு சிறுநீரகத்தோட பிறக்குற நோயை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அப்படி ஒரு கிட்னி இருந்தா என்னென்ன மாதிரியான உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்? இதை பத்தி தான் இந்த வீடியோவுல தெரிஞ்சுக்கப் போறோம்.

Brazilஅ சேர்ந்த body builder ஆன Cristian Annes ஒரே ஒரு கிட்னியோட பிறந்தவர். சின்ன வயசுல இருந்து ஆரோக்கியமா இருந்து வந்த அவருக்கு 2022ஆம் ஆண்டு கிட்னி நோய் பாதிப்புகள் தொடங்கி இருக்கு. ஒரு வருஷமா தொடர் சிகிச்சை எடுத்து, இரண்டு மாதங்களா மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருந்த நிலையில, சிகிச்சை பலனளிக்காம இறந்திருக்காரு. இந்த செய்தி, வலைதளங்கள்ல பரவிக்கிட்டிருக்க சூழல்ல தான் ஒரு கிட்னியோட பிறந்தவங்கள பத்தின தேடல் அதிகமா ஆகிட்டு இருக்கு.

ஒரு கிட்னியோட பிறக்குற குழந்தைகளுக்கு இருக்குற conditionக்கு பேரு unilateral renal agenesis. இப்படி பிறக்குறவங்க பொதுவா சின்ன வயசுல ஆரோக்கியமா இருந்தாலும், வயசு ஆக ஆக bp மற்றும் கிட்னி பிரச்சினைகளை எதிர்கொள்ற வாய்ப்புகள் அதிகம். Bilateral renal agenesis, அதாவது ரெண்டு கிட்னியும் இல்லாம பிறக்குற குழந்தைங்க தான் பிறந்த உடனே இறந்துடுறாங்க. இந்த மாதிரி கிட்னி இல்லாம போறதுக்கு மரபணு மாற்றம் தான் முக்கிய காரணமா பாக்கப்படுது.

2000த்துல ஒரு குழந்தை ஒரு கிட்னி இல்லாமலும், 8500ல ஒரு குழந்தை இரண்டு கிட்னியும் இல்லாமலும் பிறக்குது. மனித உடல்ல பெரும்பான்மை பகுதியை ஆக்கிரமிக்குறது தண்ணி தான். அப்படிப்பட்ட தண்ணியை சுத்திகரிச்சு, கெட்ட நீரை வெளியேற்றதுல முக்கிய பங்கு வகிக்குறது நம்ம ரெண்டு கிட்னியும் தான். கர்ப்பமாக இருக்கும்போது சக்கரை நோய் பாதிப்பு, twins அல்லது அதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒண்ணா பிறக்குறது, கர்ப்ப காலத்தின் போது எடுத்துக்குற சில மருந்துகள்னால கருவில இருக்க குழந்தை ஒரு கிட்னியோட பிறக்குறதா ஆய்வுகள்ல தெரிய வந்தித்திருக்கு.

உயர் ரத்த அழுத்தம், சிறுநீர்ல அதிகமான புரத அளவு, வளைந்த கால்கள், இதய நோய் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று மாதிரியான பாதிப்புகள் குழந்தைகளுக்கு வரும்போது அது ஒரு சிறுநீரகம் இருக்குற அறிகுறிகளா கூட இருக்கும். குழந்தை சராசரி எடையை விட குறைஞ்சு இருந்தாலும் கிட்னிகள் சரியா இருக்கா அப்படின்ற சோதனை செஞ்சு பாக்குறது நல்லது.

பெரும்பாலும் ஒரு கிட்னியோட பிறக்குற குழந்தைகளுக்கு 30 வயசு ஆகுற நேரத்துல தான் Bp பிரச்சினை, கிட்னி பிரச்சினை அதிகமாகும்னும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளவுக்கு போகலாம்னும் ஆய்வுகள் சொல்லுது. சோடியம் அதாவது உப்பு, சக்கரை அளவுகளை குறைச்சு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்களை அதிகப்படுத்துறது, கிட்னியை பாதிக்க கூடிய Nonsteroidal Anti Inflammatory drugs மாதிரியான மருந்துகளையும் வலி நிவாரணிகளையும் தவிர்க்குறது கிட்னி பாதிப்புகளை குறைக்கும்.

சீரான உடற்பயிற்சி செய்யணும் என்றாலுமே football, சண்டைப்பயிற்சிகள் மாதிரியான அதிக உழைப்பை கொடுக்க வேண்டிய பயிற்சிகளை தவிர்க்குறது நல்லது. இந்த பரிந்துரைகள் ஒரு கிட்னியோட வாழுறவங்கன்னு இல்லாம கிட்னி பிரச்சினைகளோட வாழுற எல்லாருக்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஷைனி மிராகுலா