Sunday, February 25, 2024
Home Tags SathiyamTv

Tag: SathiyamTv

இது மட்டும் தெரிஞ்சா இனி மறந்துகூட PROTEIN POWDER எடுக்கமாட்டீங்க…

0
இன்றைய காலக்கட்டத்தில் 100-ல் 90% பொதுமக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் பெண்கள் உடம்பை குறைத்து ஃபிட்டாக ஜிம்முக்கு செல்வதோடு, எந்தவிதமான முறையான அனுபவமும் இல்லாத ஜிம் மாஸ்டர்களின் பரிந்துரையில் புரதச்சத்து மாவு...

உங்க வீட்ல கரண்ட் பில் கட்டுறீங்களா? உங்களுக்கு தான் அவசர பதிவு!!!

0
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் TANGEDCO , தமிழ்நாடு மின் தொடரமைப்பு...

இத்தனை பேருக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகுதா? 

0
2024 - 2025ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசோட பட்ஜெட்,  சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நிதி நிலை அறிக்கையில பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில, மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரொம்பவே...

மீண்டும் மீண்டும் மோடியா? தமிழகத்திலும் தாமரையா? அதிர்ச்சி கருத்து கணிப்பு

0
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துட்டிருக்க சூழல்ல, அடுத்து எந்த கட்சி பெரும்பான்மை இடங்களை ஜெயிக்க போது? யார் பிரதமரா ஆகப் போறாரு? இப்படி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வலம் வந்துட்டு இருக்க நிலையில...

இந்த 8 பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட திராட்சை பக்கம் போகாதீங்க!

0
பச்சை, கருப்பு, பன்னீர் அப்படின்னு திராட்சைகள் பலவிதம். பொதுவாவே மத்த பழங்கள் பிடிக்காதவங்க கூட திராட்சையை விரும்பி சாப்பிடுவாங்க. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், விட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைஞ்ச திராட்சையில உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாவே இருக்கு. நன்மைகள் நிறையவே இருந்தாலும் உடல்ல குறிப்பிட்ட சில பாதிப்பு இருக்குறவங்க திராட்சையை சாப்பிடும்போது எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் அப்படின்னு மருத்துவ உலகம் எச்சரிக்கை கொடுக்குது.   யாரெல்லாம் திராட்சையை தவிர்க்கணும்?  அப்படின்றத தான் இந்த செய்தி வீடியோவுல நாம தெரிஞ்சுக்க போறோம். திராட்சை பழங்கள்ல Salicylic Acid இருக்கு. இந்த acid செரிமான பிரச்சினை இருக்குறவங்களுக்கு மேலும் அந்த பிரச்சினையை அதிகப்படுத்தலாம். அடி வயிற்று வலி, வயிற்று மந்தம், வாயுப்பிரச்சினை மாதிரியான சிக்கல்களை Salicylic Acid அதிகரிக்க வாய்ப்பு இருக்குறதால, ஏற்கனவே வயிற்று பிரச்சினை இருக்குறவங்க திராட்சைகளை தவிர்த்துடுறது நல்லது. இயற்கையாகவே சக்கரை அளவு அதிகமா இருக்குற திராட்சையில கலோரிகளும் அதிகம். அதுனால உடல் எடையை குறைக்க முயற்சி செஞ்சுட்டு இருக்குறவங்களும் திராட்சையை தவிர்க்குறது சரியான அணுகுமுறையா இருக்கும். திராட்சையில இருக்க ரெஸ்வெராட்ரோல் கருவோட கணைய வளர்ச்சியை பாதிக்கலாம்னு ஒரு ஆய்வுல குறிப்பிடப்பட்டிருக்கு. ஆனா, ஒரே நேரத்தில அதிகமான அளவுல திராட்சை சாப்பிடுறது தான் பாதிப்பை ஏற்படுத்தும்னு கூறப்படுது. 6 முதல் 12 மாதங்கள் கொண்ட குழந்தைகளுக்கு திராட்சை கொடுத்தா மூச்சுத்திணறல் ஏற்படும் என்பதால அதை தவிர்த்துடலாம். ஒவ்வாமை இருக்குறவங்க திராட்சை சாப்பிடும்போது சரும அரிப்பு, எரிச்சல் - இதெல்லாம் வர்றதுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால ஒவ்வாமை இருக்குறவங்க இதை சாப்பிடுறதால பல உடல் உபாதைகள் ஏற்படலாம். கிட்னி கல் மற்றும்  கிட்னியில் வேறு பிரச்சினை இருக்குறவங்களும் திராட்சையை தவிர்க்கணும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு. இருமல், தலைவலி, வாய் வறட்சி இருக்கும் போது திராட்சை சாப்பிடுவது சளியை அதிகமாக்கும் என்பதால அதை தவிர்க்குறது நல்லது என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தா இருக்கு.

உங்களுக்கு 2 கிட்னியும் இருக்கா? செக் பண்ணிக்கோங்க..இல்லன்னா உயிருக்கே ஆபத்து!

0
நம்ம உடலோட கட்டமைப்பு ரொம்பவே ஆச்சர்யமானது. பல விதமான வேலைகளை செய்யும் உறுப்புகள் அதுக்கேத்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு. அதுல கண்கள், காதுகள், நுரையீரல்கள் மாதிரி இரண்டு சிறுநீரகங்கள் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு...

விபத்துபோல் நடந்த கொலை… பின்னணியில் மாப்பிள்ளை….!

0
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அச்சிராமன் தெருவில் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அதிர்ந்துபோன அந்த பகுதி பொதுமக்கள்...

அடிக்கடி தசைப்பிடிப்பு வருதா? இதை சாப்பிடுங்க போதும்

0
இப்பல்லாம் வேலைக்கு போற பெரும்பாலான மக்கள் face பண்ற முக்கிய பிரச்சினை தசைப்பிடிப்பு தான். காரணம், ஓடியாடி வேலை செய்றதை விட computer முன்னாடி உக்காந்து வேலை பாக்குறவங்க தான் அதிகம். ஒரே positionல ரொம்ப நேரம் உக்காந்து இருக்குறது, வேலைப்பளு இப்படி பல காரணங்கள்னால தசைப்பிடிப்பு ஏற்படும். அப்ப வீட்ல வேலை செய்றவங்களுக்கு, அல்லது விளையாட்டு வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாதுன்னுலாம் அர்த்தம் இல்ல. அதாவது தசைகள் ரொம்ப நேரம் செயல்படல அப்படின்னாலும் பாதிக்கப்படும், அதிகமா செயல்பட்டுட்டே இருந்தாலும் பாதிக்கப்படும். உடற்பயிற்சி, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது, இதையெல்லாம் தாண்டி சில உணவுப் பழக்க வழக்கங்களை மாத்துனாலே சிறந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னா நம்ப முடியுதா? தசைப்பிடிப்பு பாதிப்புகளை சரி செய்யும் உணவு பழக்கங்களை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல  தெரிஞ்சுக்க போறோம். B Complex vitamin குறைபாடு இருக்கும்போது தசைப்பிடிப்பு அதிகமா ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆகிய உணவு வகைகள்ல B Complex அதிகமா இருக்கும். தசைப்பிடிப்புகளை தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்குறது ரொம்பவே முக்கியம். வியர்வை வழியா உடல்ல இருக்க நீர் வெளியேறும்போது உப்பு சத்துக்களும் வெளியேறிடும். வெயில் காலம் நெருங்கி வர சூழல்ல உப்பு சக்கரை சேர்த்த lemon ஜூஸ், இளநீர் எடுத்துக்குறதும் வாழைப்பழம் சாப்பிடுறதும் இந்த பிரச்சினையை சமாளிக்க ரொம்பவே உதவியா அமையும். வாழைப்பழத்துல பொட்டாசியம், மக்னீசியம், Vitamin B6 அதிகம் இருக்குறதால விளையாட்டின் போது ஏற்படுற திடீர் தசைபிடிப்பு சரியாக உதவியா அமையும். அதுனாலயே, தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்குறவங்க தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுறது பழக்கமாக்கிகுறது நல்லது. இன்னுமே நிறைய பேர் கவனிக்காம இருக்க விஷயம் மக்னீசியம் குறைபாடு. இந்த மக்னீசியம் குறைபாட்டினால தசைபிடிப்பு ரொம்பவே எளிதா வரலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மாதிரியான சிறுதானியங்கள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பல்வேறு வகையான பருப்பு வகைகள் - இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டுட்டு வந்தாலே மக்னீசியம் அளவுகள் சீரா பராமரிக்கப்படும். பச்சை காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் இடம்பெறுற மாதிரியான சரிவிகித உணவு முறையை follow பண்றதோட, சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகிய விஷயங்கள்ல கவனம் செலுத்துனாலே அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு பாதிப்புகள்ல இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு.

திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…

0
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில்...

அரசு பேருந்துல பயணிச்சா 10,000  ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT… 

0
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும். சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு. அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.

Recent News