தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
புதிதாக உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
ருதுராஜ், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளன.
இதேபோல், இங்கிலாந்துடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில், விராட்கோலி, ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், கே.எஸ். பாரத், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளன.