பாலா இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா சேர்ந்து நடிக்கப்போகும் புதிய படம்

311
Advertisement

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக தங்கள் திரைப்பயணத்தை தொடர்ந்தாலும் இரண்டுபேரும் சேர்ந்து நடித்த படம் இதுவரை வரவில்லை. சூர்யா பாலாவின் இயக்கத்தில் நடித்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை .தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது . இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

திருமணத்துக்கு முன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.