ஐபிஎல்-ல் இன்று நடைபெறும் லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

138
Advertisement

முன்னாள் சேம்பியனான ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், 2-ல் மற்றுமே வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், டெல்லி அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீண்டும் எழுச்சிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ள ஹைதராபாத் அணிக்கு போட்டி உள்ளூரில் நடைபெறுவது கூடுதல் பலமளிக்கும். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி, கடந்த ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் இன்று களமிறங்க உள்ளது. இரு அணி வீரர்களும் தங்களுடைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்து செயல்பட்டால், நிச்சயம் புள்ளி பட்டியலில் முன்னேறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.