இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு

368

இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அத்தியாவசிய 76 வகையிலான அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து  ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் மீள முடியும் என்று தான் நம்புவதாகவும் கலாநிதி அலாகா சிங் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காக உலக சுகாதார அமைப்பு  வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இந்தியா மற்றும் வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகள் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கும் அவர் நன்றி கூறினார்.