முதல்வருக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்

290
Ranil-Wickremesinghe
Advertisement
  1. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகை மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அந்த பொருட்கள் நேற்று இலங்கையை சென்றடைந்தன. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கடந்த 18-ந்தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று  இலங்கையை சென்றடைந்தன.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்ததாக தெரிவித்துள்ளார்.