மேலும் மூவர் அகதிகளாக தமிழகம் வருகை

479

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 குடும்பங்களை சேர்ந்த மேலும் 3 பேர் ராமேஸ்வரத்துக்கு அகதிகளாக வந்தனர்.

கொழும்புவைச் சேர்ந்த 3 பேரும் படகு மூலம் வந்துள்ளனர்.

அவர்களை கடலோர காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில், இலங்கையிலிருந்து வந்த 83 பேர், ராமேஸ்வரம் முகாமில் அகதிகளாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.