இலைங்கையின் இடைக்கால பிரதமர் இவரா?

264

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட நிலையில், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசாவை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகளை மக்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச உயிருக்கு பயந்து தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

நாளைய தேதியை குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்தா யாப்பாவிடம் கோத்தபய ராஜபக்ச வழங்கினார். கோத்தபய ராஜபக்ச ராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இடைக்கால அதிபராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்துள்ளார்.

இதற்கிடையே தாய்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் ஃபசில் ராஜபக்ச அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற ஃபசில் ராஜபக்சவின் ஆவணங்களை சரிபார்க்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்த நிலையில், விமான நிலையத்தில் இருந்த பயணிகள் ஃபசில் ராஜபக்சவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பசில் ராஜபக்ச  வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.