இலங்கையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

2091

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 21வது சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.