இலங்கை அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா

265

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் ஆடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 70 ரன்களும், ஆரோன் பின்ச் 61 ரன்களும் குவித்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.