வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை அறிவிப்பு

320

இந்திய கிரிக்கெட் அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன.

அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 24 ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 27 ஆம் தேதியும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதையடுத்து முதல் டி20 போட்டி ஜூலை 29 ஆம் தேதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்திலும், 2 மற்றும் 3 ஆவது டி20 போட்டிகள் ஆகஸ்ட் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ் மைதானத்திலும், 4 மற்றும் 5 ஆவது போட்டிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புளோரிடாவில் உள்ள ப்ரொவார்ட் கவுண்டி மைதானத்திலும் நடைபெற உள்ளது.