சூர்யா Fansக்கு செம ட்ரீட்

258
Advertisement

கடந்த மூன்று வருடங்களில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ முன்னணி வகிக்கிறது.

கோவிட் ஊரடங்குகளுக்கு இடையே வந்த இந்த இரண்டு படங்களுமே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தாலும், OTTயில் மட்டுமே ரிலீஸ் ஆனது.

தனித்துவமான இந்த படங்களை திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே என்ற ரசிகர்களின் குறையை தீர்க்க பிரபல சென்னை தேட்டர்கள் களம் இறங்கியுள்ளது.

ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இந்த இரு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், சூர்யாவின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.