கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

173
Advertisement

இதுதொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 71 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 992 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.18 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 240 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களும், 38 கோடியே 74 லட்சத்து 59 ஆயிரத்து 97 ரூபாய் மதிப்புள்ள மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 29 கோடியே 43 லட்சத்து 1 ஆயிரத்து 885 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.