அரபிக்குத்து பாடலுக்காக சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

474
Advertisement

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரப்போகும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்திலிருந்து அனிருத் இசையமைத்துள்ள ,’அரபிக் குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு , யூ ட்யூப்பில்100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .


இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்,இந்த பாடலை எழுதியதற்காக நடிகர் விஜய் தன்னை தொலைபேசியில் அழைத்ததாகவும் ,இப்பாடலை தான் எழுதியதற்கு நன்றி தெரிவித்ததாகவும் ,அரபிக் மொழியிலெல்லாம் பயங்கரமாக எழுதுகிறாய் என்று தன்னை பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.