பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

163
Advertisement

ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு நிறைவடைந்து ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பள்ளிக் கல்வித்துறையில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வெளிநாடு சென்றிருந்த முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு பள்ளிகள் திறப்பு விழா ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

நாளை மறுநாள் (ஜூன் 7) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் மாநிலத்தின் பல பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. சில இடங்களில் 104, 106 என்று கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாலை நேரத்திலும் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் உள்ளது.

வைத்திலிங்கம் பிளானை உன்னிப்பா கவனிங்க – மாஜிக்களுக்கு உத்தரவு!
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் இந்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் போது உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனால் பள்ளிகள் திறப்பு மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஜூன் 12ஆம் தேதி கிழமை பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.