சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது

367
Advertisement

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சரோஜினி நாயுடு. சிறந்த கவிஞரான இவர், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் . இந்திய தேசிய காங்கிரசில் முதல் பெண் தலைவராகவும், முதல் பெண் கவர்னராகவும் பதவி வகித்தவர். சரோஜினி நாயுடுவின் வாழ்க்கைக் வரலாறு சினிமா படமாக தயாராகிறது. இதில், சரோஜினி நாயுடுவாக நடிகை பானுபிரியாவின் சகோதரி நிஷாந்தி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் .

இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், ஒன்று எங்கள் ஜாதியே, ரயிலுக்கு நேரமாச்சு, போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை வினய் சந்திரா டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.