‘பீஸ்ட்’ படத்திற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை ஓட்டிய திரையரங்கம்- ரசிகர்கள் கதறல் !

210
Advertisement

தளபதி விஜய் நடித்த  ’பீஸ்ட்’  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில்.திரையரங்கு ஒன்றில்  பீஸ்ட்டின் முதல் பகுதி முடிந்த பின் ,  ‘ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படத்தின் இரண்டாம் பகுதி திரையிடப்பட்டது.

’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில்  கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில்  ’பீஸ்ட்’ திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்ட்டாம் என திருவிழாவாய்  பீஸ்ட்டின் முதல் நாளை கொண்டாடினர். இதையடுத்து ’பீஸ்ட்’ படம் திரையிடப்பட்டது, முதல் பகுதி நிறைவடைந்து இடைவெளிக்குப் பின்னர் ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் பகுதி திரையிடுவதற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியை ஆப்ரேட்டர் தெரியாமல் போட்டுவிட்டார்

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ’பீஸ்ட்’ படத்திற்கு பதிலாக ஆர்.ஆர்.ஆர் படத்தை மாற்றிவிட்டீர்கள் என்று கூற அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை நிறுத்தி விட்டு ’பீஸ்ட்’ படத்தை திரையிட்டது.

சிறிது நேரத்தில் திரையரங்கின் உள்ள கதறிய ரசிகர்களின்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது