சீரியலை பாதியிலேயே விட்டு விலகும் ‘ரோஜா’ நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

50
Advertisement

தெலங்கு, கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரியங்கா நல்காரி, சன் டிவியின் ரோஜா சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். சிறுவயதிலேயே நடனத்தை முறையாக கற்றுக்கொண்ட இவர், இதுவரை 12 திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ரோஜா’ சீரியல் மட்டுமில்லாமல், Zee தமிழில் ஒளிபரப்பாகும் ‘சீதாராமன்’ எனும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். கலகலப்பான மாமியார் மருமகள் சண்டையை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சீரியலை விட்டு பிரியங்கா வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 23ஆம் தேதி தனது காதலரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா ‘ரோஜா’ சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.