மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உலா வரும் அரிசிக்கொம்பன் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..!

178
Advertisement

கேரளா வனப்பகுதியில் இருந்து கடந்த வாரம் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளது.

இதனால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஆனந்தா எஸ்டேட்டில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியை சேர்ந்த பெண்ணை, காட்டு யானை தாக்கியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், யானையிடம் இருந்து பெண்ணை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். யானை தாக்கியதில் காயம் அடைந்த பெண்ணுக்கு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.