சென்னைக்கு திடீரென வந்த.. 20 ராட்சச விருந்தாளிகள்.. மிரண்டு போன மக்கள்..

244
Advertisement

மீன் பிடி தடைக்காலத்தில் சென்னை கடல் பகுதிகளுக்கு ஒரு பெரிய முக்கிய விருந்தாளி வந்த சம்பவம் கடலில் ஆய்வாளர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடை செய்யலாம் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைசெய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளை திமிங்கல சுறாக்கள் பார்வையிட்டு உள்ளன. இவை உலகில் உள்ள மீன்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். பொதுவாக சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன.

சென்னை கடற்கரை பகுதியில் டால்பின்கள் கடந்த 10 மாதங்களில் 4 முறை இவை மீண்டும் மீண்டும் தோன்றி உள்ளன. சமீபத்தில் ஈச்சம்பாக்கம் கடற்கரையில் டால்பின்கள் தோன்றியது குறிப்பிடத்தக்கது. நீலாங்கரையில் தோன்றிய டால்பின்களை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்பக்கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.