கோபிசெட்டிபாளையம் அருகே, யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

20
Advertisement

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று வரப்பள்ளம் கிராமப்பகுதியில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவம் இடத்துக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட வேட்டைதடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கரும்புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த காட்டுயானை திடீரெனஅங்கு பணியில் இருந்த கூலித்தொழிலாளி துரை என்பவரை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சம்பவம் இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.