சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டிருக்கும் ‘அரிசி கொம்பன்’ காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

235
Advertisement

ஏற்கனவே 18 பேரை கொன்று அட்டகாசம் செய்த ‘அரிசி கொம்பன்’ காட்டு யானை,

மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் கம்பம் பகுதிக்கு வந்த ‘அரிசி கொம்பன்’ யானை, அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில்,

அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அரிசி கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க 3 கும்கி யானைகள் முகாமிட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்தி, யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அரிசி கொம்பன் யானை, ராயப்பன்பட்டி அருகே சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டிருக்கிறது… அதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.