அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….

150
Advertisement

தேனியில் வைத்து நேற்று முன்தினம் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானை நெல்லை மாவட்டம்,

களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.

  இந்நிலையில், ரோடியோ காலர் மூலம் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வனத்துறையின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.