வெளியானது பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி

449
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதி தொடர்கதையாக வெளிவந்து, தமிழ் எழுத்துலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் சரித்திர நாவல் தான் பொன்னியின் செல்வன்.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் இத்திரைப்படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்

இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு. விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரின் individual போஸ்டரை வெளியிட்டு, செப்டம்பர் 30ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது என்று லைகா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இதனால் பெரும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர் ரசிகர்கள்.