ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ ஃபர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

314
Advertisement

ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி, ‘எதிர்நீச்சல்’, ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’, ‘நானும் ரவுடி தான்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இதையடுத்து ‘எல்.கே.ஜி.’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகியப் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில், இந்தியில் வெளியாகிய ‘பதாய் கோ’ வசூல் சாதனைபடைத்ததோடு, தேசிய விருதையும் வென்ற ‘படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி, நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடிப்பதோடு, என்.ஜே. சரவணன் உடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவும் செய்துள்ளர்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இந்தப் படத்தின் மூலம் 3-வது முறையாக இணைந்துள்ள ‘வீட்ல விசேஷம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அத்துடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ஜூன் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.