ரணில் விக்கிரமசிங்கே நிதி மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்

260

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தனா்.

அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா்.

அதன்பின், பல்வேறு துறைகளுக்கு மந்திரிகளை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறாா்.

கடந்த மே 14-ஆம் தேதி 4 மந்திரிகளும், கடந்த மே 20-ஆம் தேதி 9 மந்திரிகளும் பதவியேற்றனா்.

இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். இருப்பினும் நிதி மந்திரி பதவியை யாருக்கும் வழங்கவில்லை.

இந்நிலையில், இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.