இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரம சிங்கே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், உலகளாவிய உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் இலங்கை உணவுக்காக போராடும் நிலை வரும் என்று எச்சரித்தார்.
உணவு இல்லாமல் போகும் நாடுகள் என உணவு மற்றும் விவசாய அமைப்பு பட்டியலிட்டுள்ள நாடுகளில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கே கூறினார்.