ரஜினியை வம்புக்கு இழுத்த கே டி குஞ்சுமோன்

575
Advertisement

2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜிவி கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு இயக்குனர் மணிரத்தினம், நடிகர் ரஜினிஉள்பட யாருமே உதவி செய்யவில்லை என்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் குற்றம்சாட்டியுள்ளார் .ஜி வி மௌன ராகம்,அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் ,மைக்கேல் ஜாக்சனை வைத்து ஒரு பிரம்மாண்ட நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து மைக்கேல் ஜாக்சன் வராமல் போனதால் பெரிய நஷ்டத்தை சந்தித்தார் .ரஜினி, விஜய் போன்றவர்களை வைத்து படங்களை தயாரித்தவர், கடனில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்திருக்கிறார் .