பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் – 14 வது முறையாக வெற்றி பெற்ற நடால்

400

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நார்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் இருவரும் மோதினர்.

இதில் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று தான் “KING OF CLAY” என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் ரபேல் நடால் வீழ்த்தினார்.

இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம், நடால் வென்ற Grand Slam பட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதராக ஆண்ட்ரெஸ் கிமெனோ இருந்த நிலையில், 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை முறியடித்து, ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதர் ஆனார்.