புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

133
Advertisement

இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தால், தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை வரும் மே 8ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் இன்று முதல் கோடை விடுமுறை துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.