அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட தனியார் பள்ளிகள்? கடும் நடவடிக்கை பாயும்.. அன்பில் மகேஷ் வார்னிங்…

133
Advertisement

கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் இந்த உத்தரவை சில தனியார் பள்ளிகள் மீறியதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அண்மையில் 10 ,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 1-ந் தேதி, 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விட்டு அறிவிப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். தொடர்ந்து தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, அரசின் இந்த உத்தரவை தனியார் பள்ளிகள் காற்றில் பறக்க விட்டதாக புகார் எழுந்தன. சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியானது. பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புமாறு பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.