பொன்னியின் செல்வன் போஸ்டர்களை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

611
Advertisement

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள காவிய திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதுள்ளனர் . இது 10 ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசு குடும்பத்தின் கதையாகும்.
நேற்று விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோரின் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்தப் போஸ்டர்களைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். தஞ்சாவூரை மையப்படுத்திய கதையில் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் அப்படியே வடஇந்திய படத்தைப் போல இருப்பதாகவும், த்ரிஷாவை சிவப்பாக காட்டிவிட்டு, அவர் அருகில் இருக்கும் சிறுமிகளை கறுப்பாகக் காட்டியிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.குறிப்பாக விக்ரம் இடம்பெற்றுள்ள போஸ்டரில் அவரது தலையை தனியாக ஒட்டி வைத்தது போலிருப்பதாகவும், விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.