கர்நாடகாவில் சொகுசு விடுதியில் இருந்து கட்டுக்கட்டாக நான்கரை கோடி ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்…

129
Advertisement

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பங்கார்பேட் தாலுகாவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சொகுசு விடுதியில் இருந்து கட்டுக்கட்டாக நான்கரை கோடி ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த தொகை, விடுதியில் இருந்தும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டது. விடுதியை வாடகைக்கு எடுத்துள்ள நபர், காங்கிரஸ் வேட்பாளருக்கு தெரிந்தவர் என கூறப்படுகிறது.