சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த பிரதமர்

341

குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாடு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, வணக்கம் என தமிழில் பதாகையை ஏந்தி நின்ற சிறுவனுக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார்.