தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!

126
Advertisement

2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.

அதுபோல மிக சிறப்பாக பேட்டிங் விளையாடக் கூடிய கே.எல்.ராகுல், ரோஹித், குர்யா குமார் யாதவ், மயாங் அகர்வால் போன்ற வீரர்கள், ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவர்களால் தொடந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை ,ஆனால் இந்த ஐ.பி.எலில் பல மூத்த வீரர்கள் தங்களது வயதையும் மீறி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இஷான் ஷர்மாவுக்கு 34 வயது ஆகும் நிலையில், இவர் 2021 க்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎலில் விளையாடுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றியில் இஷாந்த் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை வென்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் சிறப்பாகப் பந்துவீசினார்.

அஜிங்க்யா ரஹானே எம்எஸ் தோனியின் அணியில் இணைந்த பிறகு சிறப்பாக விளையாடுகிறார். சிஎஸ்கே அணிக்காக ரஹானே 2 அரைசதங்களுடன் 209 ரன்களை அடித்துள்ளார், அதுபோல கே.கே.ஆர் அணிக்கு எதிராக மிக அற்புதமாக விளையாடினார், இதனால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, தற்போது இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மாவுக்கு வயது 34 ஆகிறது, மோகித் 2014 ஆம் அண்டு சென்னை அணியில் விளையாடி பர்பிள் நிற கேப்பை வென்றவர், ஆனால் அதற்கு பிறகு இவர் சிறப்பாகச் செயல்படவில்லை, ஆனால் இந்த ஆண்டு 4 விக்கெட்டுகளைத் வீழ்த்தி அருமையான பந்துவீச்சு தரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவுக்கு 34 வயதாகிறது. ஆனால் தற்போது இவர் 6 போட்டிகள் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஐபிஎல் 2023 ஏலத்தில் எடுக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் அணிக்குப் பந்துவீச்சாளராக மட்டுமே இருந்தார்.

ஆனால் சந்தீப் ஷர்மா ஐபிஎல் 2023 இல் சிறப்பாக விளையாடி வருகிறார், சிஎஸ்கேயின் எம்எஸ் தோனிக்கு ஒரு சிறந்த இறுதி ஓவரை வீசினார். இதுவரை 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.