பாலியல் புகாரில் பிரபல டைரக்டர் கைது

440
Advertisement

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ‘படவேட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர் மற்றும் அதிதி பாலன் ஆகியோர் நடிக்கின்றனர் . இந்த படத்தை லிஜு கிருஷ்ணா டைரக்டு செய்து வருகிறார். இந்த நிலையில் டைரக்டர் லிஜு கிருஷ்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, காக்கநாட்டைச் சேர்ந்த இளம்பெண் கொச்சி போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது படப்பிடிப்பு தளத்துக்கு சென்று லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.