ஒரேநாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் விருதுகளை வழங்கி கவுரவித்தது, உலக அரங்கில் தமிழர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது….

132
Advertisement

இங்கிலாந்து தலைநகர் லண்டனில்,  உலக அளவில் சிறந்த கல்விச்சேவை புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், உலகமெங்கும் இருந்து பல கல்வி நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கலந்துகொண்டன. உலக தமிழ்ச்சங்க அமைப்பின் சார்பாக இந்த விருதுகளுக்காக இந்தியாவில் இருந்து நான்கு கல்வி நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டன. சென்னை மாதவரத்தில் உள்ள “ஆலிவ் ட்ரீ” பள்ளி இந்த விருதுக்காக தேர்வாகியிருந்தது.

இதையொட்டி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலிவ் ட்ரீ பள்ளியின் சேர்மன் டாக்டர் ஐசக் லிவிங்ஸ்டோனுக்கு இங்கிலாந்து எம்.பி. Dame Nia Griffith விருதுகளை வழங்கி கவுரவித்தார். உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தலைமை நிர்வாகி Bianka Baur உடனிருந்தார்.  விருதுகளை பெறும்போது, பள்ளியின் தாளாளர் டாக்டர் திருமதி ஜாய் ஐசக்கும் உடனிருந்தார்.

முன்னதாக வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் சேர்மன் முனிரத்தினம் ஆகியோருக்கும் சிறந்த கல்விச்சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் எம்.பிக்கள் வீரேந்திர சர்மா, டேமி நியா கிரிஃபித் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

பலநாடுகளைச்சேர்ந்த கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒரேநாளில் தமிழகத்திற்கு மூன்று விருதுகள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது