விமான விபத்து – மீட்கப்பட்ட 22 உடல்கள்

247

நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் ‘தாரா’ ஏர் என்ற விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது.

விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்தனர்.

விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், மாயமான விமானம் முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அதில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேபாள நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.