நெல்சனுக்காக வருத்தப்பட்ட லோகேஷ்

166
Advertisement

அண்மையில் வெளியான விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவின் கொண்டப்படக் கூடிய இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ்.

வெளியான நாள் முதலே விக்ரம் வசூலை அள்ளியதுடன், விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதற்கிடையே, ஏப்ரல் மாதம் வெளிவந்த Beast படத்தை தொடர்ந்து வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள், லோகேஷிடம் இருந்து நெல்சன் கற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல காட்டமான விமர்சனங்களை நெல்சன் மீது வாரி இறைத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ், நெல்சனையும் தன்னையும் ஒப்பிட்டு நெல்சனை இணையத்தில் troll செய்வது மிகவும் தர்மசங்கடமாக உள்ளது எனவும், ரசிகர்கள் யாரையும் அவ்வாறு அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். லோகேஷின் இந்த கருத்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.