விருதுநகர் அருகே, பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமானது…

21
Advertisement

விருதுநகர் மாவட்டம், மீனாட்சிபுரம் பகுதியில் பூமிநாதன் என்ற விவசாயி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் விவசாயம் செய்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால், சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி பூமிநாதன், சம்பத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.