அடேங்கப்பா உலகிலேயே TOP!!  அம்பேத்கர் சிலையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்…

39
Advertisement

உலகமே வியந்து பாக்கக்கூடிய ஒன்றாக தற்பொழுது இருப்பது ஆந்திராவில் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.இந்த உயரமான சிலை சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகின் மிக உயரமான டாக்டர் அம்பேத்கர் சிலையை நேற்று  விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்துவைத்தார்.உலகின் மிக உயரமான 50 சிலைகளில் ஒன்றாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரை பரப்பிலிருந்து  இருந்து 206 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 81 அடி மேடையில் 125 அடி உயரம் கொண்டதாக சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சிலைக்கு சமூக நீதியின் சிலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படும் இந்த சிலையை விஜயவாடாவில் உள்ள  ஸ்வராஜ் மைதானத்தில், எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இந்த சிலை நிறுவும் பணிகள் ஆந்திரப் பிரதேச அரசின் சமூக நலத் துறையால் மேற்பார்வையிடப்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் லிமிட் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக  இருந்தது. இதற்கான ஒப்பந்ததாரராக கேபிசி ப்ராஜெக்ட் லிமிட் இருந்துள்ளது.வடிவமைப்பாளராக எம்.எஸ் டிசைன் அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டது.

இந்த சிலைக்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன

55 தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்களுடன் 500 முதல் 600 வேலையாட்கள் இந்த சிலையை நிறுவியுள்ளனர். இந்த சிலை இரண்டு ஆண்டுகாலமாக கட்டப்பட்டு வந்திருக்கிறது.அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் 21-ல் தொடங்கப்பட்டது. இந்த சிலையின் பீடம் பவுத்த கட்டடிக் கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிலை நிற்கவைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த பீட பகுதியை 11,140 கன மீட்டர் கான்க்ரீடாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் உருவாக்கியுள்ளனர் மேலும் இது  இளஞ்சிவப்பு நிறத்தில் மணல்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் சிலையின் கீழ் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது இங்கு 2000 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம்,குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், உணவு அரங்கம்,இசை நீரூற்று, நீர் நிலைகள், நடைபாதைகள் ஆகையவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை மின்னணு காட்சிகளுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் இந்த எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் 166 தூண்கள் உள்ளன, அந்த தூண்கள் அனைத்தும் அம்பேத்கரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைபடைப்புகளுடன் கூடியவையாக அமைந்திருக்கிறது. மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்தச் சிலை சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம் என்று அனைவரும் கருத்துதெரிவித்து வருகின்றனர்.